கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் தொடர்பில் வெளியான தகவல்..
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்தங்களால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் அனைத்து விடைத்தாள்களும் தற்போது பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உயர்தரப் பரீட்சை
அத்துடன் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் பரீட்சை நிறைவடைந்த பின்னர், அனைத்து விடைத்தாள்களும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

இது பல ஆண்டுகளாக முறையாக நடந்துவரும் ஒரு நடைமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி, மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri