விடுதலை செய்யப்பட்ட தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்றுவந்த விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் விடுதலை பெற்ற அவர் பாங்காக்கில் உள்ள இல்லத்திற்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டு
ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 74 வயதான தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு உடல்நலக் காரணங்களால் அந்நாட்டு பொலிஸ் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தக்சின் ஷினவத்ராவுக்கு 08 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை ஒரு வருடமாக குறைக்க தாய்லாந்து மன்னர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
