முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் தங்கியிருந்த விடுதிக் காணியில் ஏராளம் ஆயுதங்கள் மீட்பு
பொலிஸ் திணைக்களத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வசித்த, உத்தியோகபூர்வ விடுதியின் காணியில் இருந்து ஏராளம் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துணுவெவ பொலிஸ் நிலைய உத்தியோகபூர்வ விடுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிஸ் சேவை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கலென்பிந்துணுவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அவரது முறைகேடான செயற்பாடுகள் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
அதுவரை காலமும் அவர் தனது குடும்பத்தினருடன் கலென்பிந்துணுவெவ பொலிஸ் நிலைய உத்தியோகபூர்வ விடுதியில் வசித்து வந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தான் வசித்த விடுதியின் காணியில் ஏராளமான துப்பாக்கித் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், நேற்றைய தினம் (02) குறித்த காணி தோண்டப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
பாதாள உலகக்கும்பல்கள்
இதன் போது பல்வேறு ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 341 தோட்டாக்கள், இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்ட ஏராளம் ஆயுதங்கள் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக அவர் மறைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
