கெய்ர் ஸ்டார்மரை தீய சமூக ஊடக தளங்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தும் முன்னாள் பிரதமர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின்(Keir Starmer) புகழ் குறைவடைவதால் தீய சமூக ஊடக தளங்களை புறக்கணிக்குமாறு முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 15 நாட்களில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் நிகர ஒப்புதல் மதிப்பீடு 6 புள்ளிகள் குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பொன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்: வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 குழந்தைகளின் சடலங்கள்
பல்வேறு பிரச்சினைகள்
இந்நிலையில் வரவு செலவு திட்டத்தில் வரி, கேளிக்கை விடுத்திக்கு வெளியே புகைபிடிப்பதற்கு தடை ஆகிய கட்டுப்பாடுகளால் ஸ்டார்மரின் புகழ் குறைவடைந்து வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்த போதிலும், சமூக ஊடகங்களில் பின்னடைவை புறக்கணிக்குமாறு முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தலைவர்கள் பொதுக்கருத்தை அறிந்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு கவனமாக இல்லாவிட்டால், விமர்சகர்களால் முற்றிலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |