பிரித்தானியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்: வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 குழந்தைகளின் சடலங்கள்
பிரித்தானியாவில் வீடு ஒன்றில் இருந்து 3 குழந்தைகளின் சடலங்களும் ஆண் ஒருவரின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய நேற்று மதியம் 1.15 மணி அளவில் Staines-upon-Thames-ல் பிரேமர் சாலையில் உள்ள பொலிஸார் தென்கிழக்கு கடற்கரை நோயாளர் காவு வண்டி சேவையால் அழைக்கப்பட்டனர்.
பொலிஸார் தகவல்
இதன்போது சம்பவ இடத்தில், 3 குழந்தைகளும் மற்றும் ஆண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விசாரணையில் அவர்கள் உயிரிழந்ததற்கான சூழ்நிலையை ஆராய்ந்து வருவதாக சர்ரே பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம், 3ஆவது நபரின் தலையீடு இல்லை என்று நம்பப்படுகிறது என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து Bremer சாலையில் மூடப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் News Lankasri
