ஜேவிபியின் பொலிஸ் கூட்டமைப்பில் இணைந்த முன்னாள் அதிகாரிகள்
தேசிய மக்கள் சக்தியின் ஒய்வு பெற்ற பொலிஸ் கூட்டமைப்பில் முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரட்ன ( Ravi Seneviratne) மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர ( Shani Abeysekara) ஆகியோர் இணைந்துள்ளனர்.
குறித்த பொலிஸ் கூட்டமைப்பின் ஆரம்பக்கூட்டம் மஹரகமையில் (Maharagama) இடம்பெற்றது.
அழுத்தங்கள் பிரயோகிப்பு
இதன்போது உரையாற்றிய முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரட்ன, தம்மை தேசிய மக்கள் சக்தியின் இந்த அமைப்பில் சேரவேண்டாம் என்று அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தம்மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ரவி செனவிரட்னவுக்கு ஆளும் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் அழுத்தங்களை பிரயோகித்ததாக குறிப்பிட்டுள்ளார்;
இதேவேளை முன்னைய அரசாங்கத்தின் கீழ், அரசியல் பழிவாங்கல் மற்றும் அநீதியை எதிர்கொண்ட முன்னாள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநருக்கு நீதி வழங்கப்படும் என்றும் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
