முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவிற்கு பிணை
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உளுகேத்தென்ன பிணையில் செல்ல குருநாகல் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கினை பரிசீலித்த நீதிமன்றம், அவரை தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க தீாமானித:துள்ளது.
நிஷாந்த உளுகேத்தென்ன, கடந்த ஜூலை 28ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அலவ்வ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை கடத்திச் சென்றதும், அவர் காணாமல் ஆக்கப்பட்டதுமான சமப்வம் தொடர்பில் நிஷாந்த மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், முன்னாள் கடற்படை தளபதியுடன் சேர்த்து முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் மொஹொட்டி உள்ளிட்ட மேலும் மூவரும் இதே சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



