கணவனை காப்பாற்ற முயன்ற முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி அதிரடி கைது
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி லக்மந்தி ஹெட்டியாராச்சி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு ரூபா 50,000 இலஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
தன் கணவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கோருவதற்காக, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு அவர் இலஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC), கூறப்படும் இலஞ்ச முயற்சி தொடர்பாக லக்மந்தி ஹெட்டியாராச்சியைக் கைது செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி எனக் கண்டறிந்த கொழும்பு உயர் நீதிமன்றம், அவருக்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ஜூன் மாதம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.