மழையில் குடை கேட்க வந்த நபர் - வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி
சிலாபத்தில் வீட்டில் தனியாக இருந்த வயோதிப பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சிலாபம் - ததுருஓயாவில் வசிக்கும் 27 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
80 வயதுடைய குறித்த பெண் அணிந்திருந்த 80,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த வேளையில் குடை கேட்பது போல் நடித்து வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.