மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் விடுதலை
மத்திய வங்கிய முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், முதலாவது திறைசேரி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் உள்ளிட்ட மேலும் பத்து பேர் இவ்வாறு விடுதலை செய்யப்படடுள்ளனர்.
மூவரடங்கிய கொழும்பு விசேட நீதிமன்றம் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிணைமுறி மோசடி வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உட்பட பத்துபேருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த பொதுச்சொத்துகள் சட்டத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளை முன்கொண்டு செல்ல முடியாது என தீர்மானித்துள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை தீர்ப்பின் பிரகாரம் நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.