விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்த நபர் சடலமாக மீட்பு
முன்னாள் போராளி மகேந்தி என்பவர் பலா மரத்தில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 55 வயதுடைய இராமப்பிள்ளை கமலராசா (மகேந்தி) என்பவர் அவரது வீட்டுக்கு முன்பாகவுள்ள பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை
இவர் இந்தியப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றதுடன் பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, அவரின் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



