அனுர குமாரவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்த முக்கியஸ்தர்கள்
இலங்கையில் கணக்காய்வாளர் நாயகம் பதவியை வகித்த இருவர் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு(Anura Kumara Dissanayaka) ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகங்களான சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் காமினி விஜேசிங்க ஆகியோர் இவ்வாறு அனுரவிற்கு தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று(30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார நிலை
தீர்மானமிக்கதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தற்போதைய மற்றம் கடந்த கால தலைவர்களே நாட்டின் பொருளாதார நிலைக்கு காரணம் என சந்திரசிறி மாயதுன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதிய அரசியல் தலைமை தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 2015ம் ஆண்டு மத்திய வங்கி பிணை முறி மோசடியானது நாட்டின் வீழ்ச்சிக்கான ஓர் முக்கிய காரணம் என காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கேட்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டுமென இந்த இருவரும் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
