கூலி கொலையாளிகளாக செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள்
இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மே என்பவரினால் வழிநடத்தப்படும் பாதாள உலகக் குழுவில் இராணுவ கமாண்டோ படை பிரிவிலிருந்து தப்பிச் சென்ற 18 படை வீரர்கள், கூலி கொலையாளிகளாக செயல்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது இவ்வாறு பாதாள உலகம் குழு செயற்பாடுகளில் இணைந்து கொண்ட முன்னாள் கமாண்டோ படையினர் ஒன்பது பேர் பெஹலியகொட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் படைவீரர்களை விளக்க மறையலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
போதைக்கு அடிமை
முன்னாள் கமாண்டோ படை வீரர்களை பயன்படுத்தி படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலக குழு தலைவரின் பிரதான சகாவான கமாண்டோ சலிந்த என்பவர் இந்த இராணுவ முன்னாள் இராணுவ வீரர்களை கொண்ட கூலிப்படையை உருவாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கூலிப்படையினராக செயல்பட்டு வரும் முன்னாள் இராணுவ கமாண்டோ படை சிப்பாய்கள் அதிகமானவர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ படை வீரர்கள்
இந்த முன்னாள் படைவீரர்களுக்கு தேவையான போதை மருந்துகளையும், வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தையும் பாதாள உலகக்குழு தலைவர் வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அடிப்படையில் இவர்கள் கூலிக்கு கொலைகள் செய்து வருவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த குழுவில் இணைந்து கொண்ட இராணுவ படை வீரர்கள் தொடர்பிலான தகவல்கள் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா



