நீதிமன்ற சான்று பொருட்களை திருடிய பொலிஸ் அதிகாரி கைது
மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சில சான்றுப் பொருட்கள் திருடபட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் நேற்று(18) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மன்னார் நீதிமன்றத்தின் காவலாளி தங்குமிட பகுதி நேற்று(18) மன்னார் பொலிஸாரினால் சோதனையிடப்பட்டுள்ளது.
இதன் போது திருடப்பட்ட சான்றுப் பொருட்களான ஒரு தொகுதி கேரள கஞ்சா
பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம்(கசிப்பு)
ஆகியவற்றை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
