பிள்ளையானின் அலுவலகத்தில் சிக்கிய முக்கிய ஆதாரம்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடளாவிய ரீதியில் விசேட வழிபாடுகளும், நீதியைக் கோரும் அமைதி பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான விசாரணைகள் மற்றும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட விதம் குறித்து கலகொட அத்தே ஞானசார தேரர் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
பிள்ளையான் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்து தாக்குதல் தொடர்பான மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கப்பெற்று வருவதாக ஜனாதிபதியும் பிரதி அமைச்சரும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த போதிலும், ஓராண்டுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் அதனை உறுதிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த 'B' அறிக்கையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை என்பதைத் தேரர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் இலாபங்களுக்காகக் கூறப்பட்ட இத்தகைய கருத்துக்கள், உண்மைக்கு அப்பாற்பட்டவை என்பது இப்போது நீதிமன்ற அறிக்கைகள் ஊடாகப் புலனாகத் தொடங்கியுள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam