மாவீரர் நாளினை எல்லோரும் அஞ்சலி செய்வார்கள்: மாவை சேனாதிராஜா (Video)
எல்லோரும் மாவீரர் நாள் அஞ்சலி செய்வார்கள், நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏனைய நீதிபதிகள் தீர்மானித்தது போன்றதற்கு மாறாக அமைந்திருப்பது போல தெரிகின்றது.அதற்கான சரியான பதிலை சட்டத்தரணி சிறிகாந்தா தருவார்.
நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நடைபெறும்.எல்லோரும் அஞ்சலி செய்வார்கள். அஞ்சலி நடைபெறும். அதனை தடுப்பதற்கு அல்ல. அவரது தீர்ப்பினடிப்படையில் அதனை தடுக்கவில்லை என்று தான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri