தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் உடனடியாக அதாவது ஓரிரு தினங்களில் நாட்டில் தற்போதுள்ள நிலைமை சீராகும் என்று கருத முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் பிரதிபலனை எதிர்வரும் இரு வாரங்களின் பின்னரே பெற முடியும். எனவே அடுத்த இரு வாரங்களின் பின்னர் சிறந்த பிரதிபலனைப் பெறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் உடனடியாக அதாவது ஓரிரு தினங்களில் நாட்டில் தற்போதுள்ள நிலைமை சீராகும் என்று கருத முடியாது.
இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் பிரதிபலனை எதிர்வரும் இரு வாரங்களின் பின்னரே பெற முடியும்.
எவ்வாறிருப்பினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள போதிலும் , தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும். பிரதேச ரீதியில் எவ்வாறு அவற்றை முன்னெடுப்பது என்பது குறித்து உரிய அதிகாரிகள் தீர்மானிப்பர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
