சட்டத்தின் முன் சகலரும் சமமே: ஞானசார தேரர் விவகாரத்தில் பொன்சேகா கருத்து
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. அதற்கு அனைவரும் விதிவிலக்கின்றி கட்டுப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஒவ்வொரு மதத்திற்கும் வெவ்வேறான ஆன்மீக மற்றும் கலாசார நடைமுறைகள் இருந்தாலும், நாட்டில் நிலவும் பொதுச் சட்டக் கட்டமைப்புக்கே அனைவரும் கீழ்ப்படிய வேண்டும்.அந்தச் சட்டமே நாட்டில் உயரியது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறைத்தண்டனை
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விவகாரம் குறித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் சட்ட ஒழுங்கையும் பொது அமைதியையும் பாதுகாப்பதற்குத் தனிநபர்களை விடச் சட்டத்தின் ஆட்சியே முதன்மையானது என்பதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நான் அரசாங்கத்தையே விமர்சித்தேன்! சிறுபான்மையினரை விமர்சிக்கவில்லை - விளக்கம் கூறும் லக்ஸ்மன் கிரியெல்ல
you may like this..