''கோட்டாகோகம'' 50ஆவது நாள் பூர்த்தியை முன்னிட்டு புத்தளத்தில் நிகழ்வுகள் (Photos)
கோட்டா கோகம ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 50வது தினத்தைப் பூர்த்தியை முன்னிட்டு புத்தளத்தில் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது புத்தளம் மாவட்ட சர்வமத குழு தலைவர்களினால் பொருளாதார நெருக்கடி சம்பந்தமாகக் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவுகோரி 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தீப்பந்தம் ஏற்றி அஞ்சலி
இதனைத் தொடர்ந்து மிரிஹானை மற்றும் கொழும்பு பகுதிகளில் தாக்கப்பட்ட மற்றும்
கொல்லப்பட்ட இளைஞர்களுக்கும் தீப்பந்தம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாவிற்கு எதிராகக் கோட்டாகோஹோம் என கோஷங்கள் எழுப்பப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து புத்தளம் மாவட்ட இசைக் கலைஞர்களால் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் பாடல்களும் இசைக்கப்பட்டுள்ளன.



