திருமணம் உட்பட நிகழ்வுகளுக்கு அனுமதி! - சுகாதார அமைச்சர் அறிவிப்பு
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் இன்று முதல் பல துறைகளில் வழமையான சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, திருமணங்கள், உணவகங்கள், பெரிய அளவிலான ஹோட்டல்கள் மற்றும் சினிமாக்கள், நிகழ்வு முகாமைத்துவம் (இவன்ட் மனேஜ்மென்ட்) எனப்படும் குழுக்களுக்கும் இன்று முதல் இயங்க அனுமதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் திருமணங்கள், சினிமாக்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் நிகழ்வுகளை வழக்கம் போல் நடத்த அனுமதிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்வுகள் முன்னர் வரையறுக்கப்பட்ட திறன்களின் கீழ் நடத்த அனுமதிக்கப்பட்டன. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ள கோவிட் செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்படும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதுபோன்ற நிகழ்வுகளை வழக்கம் போல் நடத்த அனுமதிக்கும் முன், முழு தடுப்பூசி மற்றும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.


இலங்கையின் முதல் கரிநாள்...! 1 நாள் முன்

அழகில் ரீல் அம்மா நயன்தாராவை மிஞ்சும் 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள் Cineulagam
