பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ். பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் இன்று(17.03.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்டவர்கள் உரையாற்றியிருந்தனர்.
வாள் வழங்கி வைப்பு
அத்தோடு பொலிஸாரால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு நினைவுச் சின்னமாக வாள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மத குருமார்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சமுக பொலிஸ் குழுக்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan