மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுய உதவி குழு வலுப்படுத்தல் நிகழ்வு
மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தும் மாவட்ட சுய உதவி குழு கூட்டமும் அனர்த்த நிலமைகளின் போதான விடயங்களை கையாளுதல் தொடர்பான நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச மட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சுய உதவி குழுக்களை பொருளாதார ரீதியான முன்னேற்றம், சுய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அனர்த்த நிலமைகள் தொடர்பான விளக்கம்
அனர்த்த காலங்களின் போது மாற்றுத் திறனாளிகளை எவ்வாறான முறையில் பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
அனர்த்த நிலமைகள் தொடர்பான விளக்கங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதி பணிப்பாளர் சுகுனதாஸ் குகதாஸ் வழங்கினார்.
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சுய அபிமானி போட்டியில் வெற்றி பெற்ற மூதூர், வெருகல், கோமரங்கடவல பிரதேச செயலகத்துக்குட்பட்ட சுய உதவி குழுக்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
