நுவரெலியா நட்சத்திர விடுதியில் 500 கிலோகிராம் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி
எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற உலர்ந்த பொருட்களை கொண்டும் உயர் ரக மதுபானங்களை கொண்டு பிரமண்டமான 500 கிலோகிராம் கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி நுவரெலியாவிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஒரு விழாவுடன் இன்று (23.10.2026) நடைபெற்றுள்ளது.
இதில் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டின் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
நுவரெலியா அரலியா கிரீன் ஹில்ஸ், நுவரெலியா அரலியா கிரீன் சிட்டி மற்றும் நுவரெலியா அரலியா ரெட் ஆகிய 3 சுற்றுலா ஹோட்டல்களின் ஊழியர்களின் இசை வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பிக்கப்பட்டு கேக் கலவைக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுமந்து நுவரெலியா பிரதான நகரை நடைபவனியாக சுற்றி வந்து நுவரெலியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிரகரி வாவி கரையோரத்தில் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கேக் கலவை தயாரிக்கும் பணி
இந்த கலவையின் போது முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், செர்ரி, பேரிச்சைபழம் மற்றும் உயர் ரக மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கலக்கப்பட்டன.
கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கு ஒரிரு தினங்கள் வரை இந்த கலவை ஊறி நறுமணமும், சுவையும் சேர அவ்வப்போது கிளரப்படுகிறது. இந்த கேக் கலவை தயாரிக்கும் பணியில் ஹோட்டலில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தற்போது கலக்கப்படும் கேக் கலவை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் கலக்கப்பட்டு பதப்படுத்தப்படும் என்றும், டிசம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்பு முழுமையாக தயாரித்து முடிக்கப்படும் என்றும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இரவு அனைவரும் ரசிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்பட்டு மிகவும் கோலாகலமாக வெட்டப்படு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என விடுதியின் பொது மேலாளர் தெரிவித்தார்.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு






கனமழை மற்றும் மண்சரிவு எச்சரிக்கை! சுற்றுலாப் பயணங்களை தவிருங்கள்: அனர்த்த முகாமைத்துவ மையம் வேண்டுகோள்
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு