மாகாணங்களுக்கு இடையிலான பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைக்காகவும், நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் மற்றும் மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்வதற்காகவும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின் பற்றத் தவறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,