பாதீட்டில் எதிராக வாக்களித்தவர்கள் எம்மோடு கை கோர்க்கின்றார்கள்:கு.திலீபன்
வரவு - செலவு திட்டத்தில் சிகப்பு பட்டனை அழுத்தி எதிராக வாக்களித்தவர்கள் கூட இன்று எம்மோடு மக்களுக்கான அபிவிருத்தி திட்டத்தில் கை கோர்க்கின்றார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் (K.Dileep) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் வரவு - செலவு திட்டம் கொண்டு வரப்பட்ட போது சிவப்பு பட்டனை அழுத்தி எதிராக வாக்களித்தவர்கள் கூட இன்று எம்மோடு மக்களுக்கான அபிவிருத்தி திட்டத்தில் கை கோர்க்கிறார்கள்.
அது உண்மையில் ஆரோக்கியமான விடயம். அது எதிர் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர்த்தவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களும் எம்மோடு இணைந்து மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு கைகொடுக்குமாறு நான் இந்த இடத்தில் அழைப்பு விடுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.