போஷாக்கு குறைவான பிள்ளைகளுக்கு மருத்துவ உதவி
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லும் போஷாக்கு குறைவான பிள்ளைகளுக்கு மருத்துவ உதவி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று பிரதேச செயலாளர் சு.ஹரன் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இதன்போது, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லும் போஷாக்கு குறைவான பிள்ளைகளுக்கு 5000 ரூபாய் வீதம் இருபது பேருக்கு மருத்துவ உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய கோவிட் - 19 அச்சுறுத்தல் காலப்பகுதியில் வைத்தியசாலைக்குச் செல்வதில் பயண சிரமங்களை எதிர் கொள்ளும் மக்களுக்கு இக் கொடுப்பனவு உதவியாக அமைந்திருக்குமென செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
இதில், நிர்வாக உத்தியோகத்தர், உள நல உத்தியோகத்தர்,
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.