அதள பாதாளத்திலிருந்து மீண்டெழும் இலங்கை! துளிர்விடும் நம்பிக்கை
இலங்கையில் வீழ்ச்சி அடைந்த சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி கண்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் வாரக் காலப்பகுதியில் மாத்திரம் 16,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவு சுற்றுலா பயணிகள் இலங்கை வரத் தொடங்கியுள்ளனர்.
ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, யுக்ரேன் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். எனினும் ஆகக் கூடுதலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை சுற்றுலாப்பயணிகளின் சுகாதார பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு, புதிய தடுப்பூசி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேர தடுப்பூசி மையமும் இயங்கி வரும் நிலையில் பயணிகள் தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும்.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதன்மூலம் மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகையினை எதிரப்பார்க்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
