பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்படும் ஐரோப்பியர்கள்
பிரெக்சிட்டுக்குப் பின், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ, பணியாற்ற வகை செய்யும் வகையிலான திட்டம் ஒன்றிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்துபோனதால், சுமார் 58,000 பேர் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படலாம் என தகவல் வந்துள்ளதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி வெளியேறியது.
என்றாலும், பிரெக்சிட்டால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்கொள்ள தயாராவதற்காக 2020 டிசம்பர் 31 வரை ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டது, அது transition period என்று அழைக்கப்படுகிறது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,