ஈரான் ராஜதந்திரிகள் தொடர்பில் ஐரோப்பாவின் அதிரடி உத்தரவு
ஈரானின் ராஜதந்திரிகள் ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிப்பதனை தடை செய்யும் அதிரடி உத்தரவு ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் பிறப்பித்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் ரோபெர்டா மெட்சோலா இந்த உத்தரவு குறித்து அறிவித்துள்ளார்.
ஈரானைச் சேர்ந்த அனைத்து ராஜதந்திரிகள் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நபர்களும், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதைத் தடை செய்வதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு
எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், “ஈரானின் துணிச்சலான மக்கள் தங்கள் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் குரல் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், வழக்கம்போல செயல்பட முடியாது” என மெட்சோலா தெரிவித்துள்ளார்.

சித்திரவதை, அடக்குமுறை மற்றும் கொலைகள் மூலம் தக்க வைத்துக் கொண்டுள்ள இந்த ஆட்சியை சட்டபூர்வமாக்க உதவும் எந்த நடவடிக்கையிலும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஈடுபடாது என வலியுறுத்தியுள்ளார்.
இந்த முடிவு, ஈரானில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri