எங்களின் முடிவுகளை நாங்களே எடுக்கின்றோம் – கிரீன்லாந்து பிரதமர்
எங்களின் முடிவுகளை நாங்கள் ஜனநாயக ரீதியில் எடுக்கின்றோம் என கிரீன் லாந்தின் பிரதமர் ஜென்ஸ்-ஃப்ரெடெரிக் நீல்சன் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தின் பாதுகாப்பு விவகாரம் முழுமையாகவும் உறுதியாகவும் நேட்டோ (NATO) கூட்டமைப்பின் கீழ் தான் அமைந்துள்ளது என நீல்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கிரீன்லாந்தில் காட்டும் ஆர்வம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் குறித்து பலரிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை தாம் புரிந்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைப்பாடு
தனது ஃபேஸ்புக் பதிவில் கருத்து வெளியிட்ட நீல்சன், “இந்தச் சூழலில் சில விஷயங்கள் தெளிவாக சொல்லப்படுவது அவசியம்” என வலியுறுத்தினார்.
“கிரீன்லாந்து, டென்மார்க் அரசாட்சியின் (Kingdom of Denmark) ஒரு பகுதியாகவும், அதே நேரத்தில் காமன்வெல்த் அமைப்பின் மூலம் நேட்டோவின் ஒரு அங்கமாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதன் பொருள், எங்களின் பாதுகாப்பும் பாதுகாப்புத் துறையும் நேட்டோவுக்குள் தான் அடங்குகின்றன. இது அடிப்படையானதும் உறுதியானதுமான நிலைப்பாடு” என அவர் தெரிவித்தார்.

மேலும், அண்மைக் காலமாக கிரீன்லாந்து மீது சர்வதேச கவனம் அதிகரித்திருப்பதை ஒப்புக்கொண்ட அவர், “எங்கள் நாட்டிற்கு அதிகமான உலகளாவிய கவனம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
அது தனிப்பட்ட முறையில் நல்ல விடயமே எனவும் இது கிரீன்லாந்தின் மூலோபாய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது எனவும் கூறினார்.
அதே நேரத்தில், நேட்டோவுடன் இணைந்து கிரீன்லாந்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் ஒரு ஜனநாயக சமூகம் எனவும் எங்கள் முடிவுகளை நாங்களே எடுக்கிறோம். எங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன” எனவும் ஜென்ஸ்-ஃப்ரெடெரிக் நீல்சன் கூறினார்.
அமெரிக்காவின் ஆர்வம் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், கிரீன்லாந்து தனது அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam