வரலாற்றில் 10 ஆவது தடவையாகவும் அதிக வெப்பநிலை பதிவான மாதம்
வரலாற்றில் தொடர்ச்சியாக 10 ஆவது தடவையாகவும் அதிக வெப்பநிலை பதிவான மாதமாக கடந்த மார்ச் மாதம் அமைந்திருந்ததாக ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் (European Climate Observatory) தெரிவித்துள்ளது.
இதன்போது கடல் மேற்பரப்பின் வெப்பநிலையும் அதிர்ச்சியூட்டும் புதிய உயர்வைக்காட்டியதாக ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.
பதிவான அதிக வெப்பநிலை
இந்த மோசமான நிலை, புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கைக்கான புதிய அழைப்புகளை தூண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
1850 -1900 ஆண்டுகளுக்கு இடையேயான சராசரி மார்ச் மாதங்களை விட, உலகளவில் கடந்த மார்ச் மாதம் 1.68 செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை ஆபிரிக்காவின் சில பகுதிகளிலிருந்து கிறீன்லாந்து, தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா வரை கடந்த மார்ச் மாதத்தில் அதிகமான வெப்பநிலை உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், அதிக வெப்ப அலை, கடும் வரட்சி, தீப்பரவல் மற்றும் கடும் மழை என்பன பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 32 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
