அமைச்சர் பீரிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் இடையில் சந்திப்பு
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கொழும்பில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைய்பியை சந்தித்துள்ளார். அமைச்சருடனான இந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சில விடயங்களை முன்வைத்துள்ளார்.
தூதுவர் முன்வைத்துள்ள முக்கிய விடயங்கள்
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை சம்பந்தமான முன்னேற்றங்கள், 2012 இலக்கம் 1 என்ற ஐக்கிய நாடுகளின் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட அமைப்புகள், நபர்களின் பட்டியலை மீளாய்வு செய்தல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்தல்,சுயாதீன நிறுவனங்களின் முன்னேற்றம்,உத்தரதேச அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பிரதான அடையாளங்கள் போன்ற இந்த விடயங்களில் அடங்கின்றன.
இலங்கையில் ஏற்படுத்தப்படும் தேசிய பொறிமுறையின் கீழ் உண்மைகளை வெளிகொணரும் போதுமான மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என அமைச்சர் பீரிஸ் இதன் போது கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலும் அரசியல் மறுசீரமைப்புகள்
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேவையான அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் சமூகத்திற்குள் பாதிப்புக்கு உள்ளாக்கூடிய மக்களை இலக்கு வைத்து பல நலன்புரிய திட்டங்களை உள்ளடக்கிய புதிய வரவு செலவுத்திட்டத்தை விரைவில் தாக்கல் செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது எனவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.
அண்மைய காலத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பாராட்டியுள்ளார்.
2024-2033 ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக்கான விதிமுறைகளை ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் கலந்துரையாடி வருகிறது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 50வது கூட்டத் தொடர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பீரிஸ், பேரவையின் உறுப்பு நாடுகளுடன் இலங்கை பலன்தரக்கூடிய செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது என கூறியுள்ளார்.