போர்நிறுத்ததை ஏற்படுத்த ஐரோப்பாவின் புதிய யோசனை: மறுக்கும் ஜெலன்ஸ்கி
போர்நிறுத்ததை ஏற்படுத்த உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடையாக மண்டலத்தை(Buffer Zone) உருவாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் யோசனையை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.
இடையாக மண்டலம் என்பது போர் நடைபெறும் இரண்டு நாடுகளுக்கிடையில் உருவாக்கப்படும் அமைதியான மண்டலம் ஆகும்.
இது, இரண்டு நாடுகளுக்கும் சொந்தமான நிலம் என கருதப்படாத நிலையில், அங்கு இராணுவம், ஆயுதங்கள் அல்லது தாக்குதல் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.
ட்ரோன் பயன்பாடுகள்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் போர்நிறுத்ததை ஏற்படுத்த சுமார் 40 கி.மீ இடையக மண்டத்தை உருவாக்குவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருவதாக அறிக்கையொன்று சமீபத்தில் வெளியானது.
இந்த யோசனையை மறுத்த ஜெலன்ஸ்கி, நவீன கால போர் முறைகளில் இடையக மண்டலம் என்பது பலனளிக்காத ஒன்று என கூறியுள்ளார்.
போர் நடவடிக்கையில் ட்ரோன் பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், பாரம்பரிய இடையக மண்டலங்கள் முற்றிலும் வீணானவை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இடையக மண்டலம் கட்டாயமாக உருவாக்கப்பட வேண்டும் எனில், உக்ரைன் தங்களுடைய எந்தவொரு பகுதியையும் இதற்காக விட்டுக் கொடுக்காது எனவும் ரஷ்யா வேண்டுமென்றால் பின்வாங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



