ஐரோப்பாவில் தமிழ் பேசும் மாணவ மாணவிகளுக்கான ஆங்கில அறிவுப் போட்டி
ஐரோப்பாவிலே ஆறாவது தடவையாக ஆங்கில அறிவு போட்டியாகிய Thumbs Up English Challenge 2025 SEASON - VI மிக விமர்சையாக நடைபெற்றுள்ளது.
Lankasri மற்றும் Tamilwin பிரதான ஊடக அனுசரணையுடன் Thumbs Up English Elocution Centre ஆங்கில பாட பிரிவினர், குறித்த போட்டியை நடத்தியுள்ளனர்.
ஆங்கில அறிவுப் போட்டி
குறித்த போட்டியானது (04/10/2025) அன்று காலை 10:30 மணி அளவில் கிட்டத்தட்ட 290 மாணவர்களுடன், 700 பார்வையாளர்கள் மத்தியில், ஆங்கில பேராசிரியர் Mrs.Charlotte NICOLAS முன்னிலையிலும், Mr.Edward BOUCHER முன்னிலையிலும் பிரான்சின் மிக முக்கியமான நினைவுச் சின்னங்களில் ஒன்றான Eiffel கோபுரத்துக்கு அருகாமையில் நடத்தப்பட்டுள்ளது.
மாணவ/ மாணவிகளின் ஆங்கில திறனை அடிப்படையாக கொண்டு 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே, Pre - Beginners , Beginners, Pre - Intermediate, Intermediate, Upper- Intermediate and FCE ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
மேலும் பலவகைப் போட்டிகள், அதாவது Recitation, Spell Bee, Speech, Oratory,Essay, Calliagraphy, Crossword, Picture Illustration, Mysterious Vocabulary, WordScramble, Punctuation writing, Comprehension Writing, Dictation போன்றவை நடைபெற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், பதங்கங்கள், சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பிரிவிகளிலிருந்தும் ஒவ்வொரு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு Thumbs Up English Elocution Centre இன் THE BEST PERFORMER OF THE YEAR 2025 ஆக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் எங்களுக்கு ஊடக அனுசரணைவழங்கிய Lankasri and Tamilwin மற்றும் Diamond house, S.R.Cocinelle, Balavinayagar cash & carry, Sundher Travels,Honey moon restaurant,Le restaurant du Golf,AP Supermarchès, Rubyna, La plage Bretonne,Ram Printers Srilanka, Neirah Tech, Copy centre, Shri barathy, அனைவருக்கும் நிறுவனத்தினர் இயக்குனர் ஜூட் ரெஷான் தில்லைராஜா நன்றியினை தெரிவித்துள்ளார்.




















இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
