இலங்கையின் இயற்கை அழகுடன் கலாசார முறைப்படி திருமணம் - ஐரோப்பிய தம்பதியின் செயல்
புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரையில் வெளிநாட்டு தம்பதியின் திருமணம் நேற்றைய தினம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஐரோப்பிய நாடான ஹங்கேரியை சேர்ந்த ஜோனஸ் கோவாஸ் மற்றும் சில்வி தோத் ஆகியோரே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இந்த தம்பதி இலங்கையின் இயற்கை அழகு மற்றும் கலாசாரத்தின் மீது கொண்ட அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.
முறைப்படி திருமணம்
இதன் காரணமாக, அவர்கள் இலங்கையின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்யத் தீர்மானித்ததாக தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோரின் ஏற்பாட்டில், கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரம்பரிய நடனக் கலைஞர்களால் தென்னோலைகளால் அழகாக வடிவமைக்கப்பட்ட மேடைக்கு மணமக்கள் அழைத்து வரப்பட்டனர். கலாசார முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.
சுற்றுலாப் பயணிகள்
பல இன மக்கள் வாழும் கற்பிட்டி தீபகற்பத்தில் இவ்வாறான ஒரு கலாசார நிகழ்வு இடம்பெற்றமை ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது.

இந்த விசேட திருமண நிகழ்வை அங்கிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு இரசித்தனர்.