இலங்கைக்கு மனிதாபிமான நிதியை வழங்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்
கடந்த மே மாதத்தில் இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து வெளியேறிய இரசாயன கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் 48 மில்லியன் யூரோ மனிதாபிமான நிதியை வழங்கவுள்ளது.
இந்த உதவி கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பேரழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 15,000 பேருக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிதியுதவி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக குறிப்பாக சிறிய அளவிலான மீன்பிடி சமூகங்களுக்கு அவசர நிவாரண உதவியாக வழங்கப்படவுள்ளது.
கப்பல் தீப்பரவலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட மீன்பிடித்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய இது உதவும்.
அத்துடன் நாட்டின் மேற்கு கடற்கரையில் அபாயகரமான மற்றும் நச்சுப் பொருட்களைச் சுத்தம் செய்ய உள்ளூர் அதிகாரிகளுக்கு இந்த நிதி உதவும்.
அதேநேரம், துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்குத் தேவையான பாதுகாப்பு பயிற்சி மற்றும் பொருட்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், கண்ணாடி போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள இந்த நிதி வழங்கப்படும்.
பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும்
முதியவர்கள் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு இந்த நிதியின்
ஊடாக சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
