ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத தடைப்பட்டியல் புதுப்பிப்பு! விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்தும் தடை
ஐரோப்பிய ஒன்றியம் தனது பயங்கரவாத பட்டியலை மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 21 பயங்கரவாத குழுக்கள் மற்றும் 14 தனிநபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, பட்டியலிடப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களின் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நிதி மற்றும் சொத்துக்களை முடக்கப்படுகின்றது.
2001 செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து யு.என்.எஸ்.சி தீர்மானத்தின் பிரகாரம் 1373/2001 ஐ அமுல்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் முதலில் பட்டியலை வெளியிட்டது.
வழக்கமான இடைவெளியில் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது.
குறைந்தது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இடையில், வழக்கமான தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் பட்டியல்களில் உள்ளடக்கங்கள் செய்யப்படுகின்றன.
இதன்படி, 2006 மே 29 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
