புதிய அரசாங்கம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்பார்ப்பு
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், இலங்கையின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக் கூடிய புதிய அரசாங்கம் அமைய வழிவகுக்கும் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தனது டுவிட்டர் செய்தியில் இதனை கூறியுள்ளது.
??President @RW_UNP was sworn in today. EU hopes this will lead to an inclusive government with solutions to current political and economic crises. ?? needs swift economic reform + safeguard individual freedoms and reconciliation efforts. ?? people can count on EU support.
— EU in Sri Lanka (@EU_in_Sri_Lanka) July 21, 2022
ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுடன் கூடிய அனைவரும் அடங்கிய அரசாங்கத்தை அமைக்க இது வழிவகுக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்துள்ளது.
இலங்கைக்கு வேகமான பொருளாதார மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. அத்துடன் தனிநபர் சுதந்திரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பாதுகாத்தலும் அவசியம்.
இலங்கை மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு தொடர்பில் நம்பிக்கை வைக்க முடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளது.