ஜீ.எஸ்.பி பிளஸ் குறித்து கண்காணிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை விஜயம்
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை குறித்து கண்காணிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு வரிச் சலுகைத் திட்டத்தை ரத்து செய்யுமாறு அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று கண்காணிப்பு நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாட்டின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொள்ள இலங்கை விஜயம் செய்யுமாறு அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியிருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஒன்றியத்திற்கான இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் புதுப்பிக்கப்படும் என்பதுடன், வரிச் சலுகையை நீடிப்பு குறித்து கண்காணிப்பதற்கு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது வழமையாகும்.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னணியில் பிரதிநிதிகள் குழுவொன்று இம்முறை இலங்கை விஜயம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
