இலங்கையின் பொது நிதிநிர்வாகத்தை வலுப்படுத்த உதவும் ஒப்பந்தம் கைச்சாத்தல்
இலங்கை அரசாங்கம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் French Development Agency (AFD) ஆகிய அமைப்புக்கள் இலங்கையின் பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்த உதவும் நிதியுதவி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க முன்னிலையில் கையளிக்கப்பட்டுள்ளன.
(1/2) The govt of Sri Lanka, the World Bank, European Union (EU) and France's official development assistance (AFD) signed financing agreements to help strengthen Sri Lanka’s management of public finances. pic.twitter.com/1UplndkYmi
— Shehan Semasinghe (@ShehanSema) July 19, 2023
பொது நிதி முகாமைத்துவத்திற்கான 9.8 மில்லியன் யூரோ நிதியானது பொருளாதார நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கொழும்பில் உள்ள EU பிரதிநிதி அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"பலவீனமான பொது நிதி முகாமைத்துவம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பங்களித்தது.
எனவே பொருளாதார மீட்சியை உயர்த்துவதற்கும் நாட்டை நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கும் முக்கிய பொது நிதி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது" என உலக வங்கியின் நாட்டு முகாமையாளர் சியோ காந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கொள்முதல் கருவிகள் மற்றும் திறமையான மின்-கொள்முதல் முறைமை இல்லாததால், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கொள்முதல் செய்வதன் திறன் மற்றும் நேரத்தை கண்காணிப்பதற்கும் உள்ள வாய்ப்புகளை இலங்கை இழப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் HE Denis Chaibi தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |