இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியைப் பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதி பெறும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.
பயண ஆலோசனை
இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் கட்டத்தின் கீழ் புதுப்பித்துள்ளது, மேலும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் குறித்து பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



