பேராதெனிய வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்ட இந்தியாவின் மருத்துவப் பொருட்கள்!
அத்தியாவசிய மருத்துவ பொருட்களின் தொகுதியை கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கையளித்துள்ளது.
இந்த அன்பளிப்பு தொடர்பாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்சா, இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏற்கனவே ஜெய்சங்கர், இலங்கைக்கு வந்திருந்தபோது பேராதெனிய வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது.
இதனையடுத்து உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் இந்திய உயர்ஸ்தானிகருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையிலேயே கண்டி வைத்தியசாலைக்கு இன்று மருத்துவப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இந்திய கடன் வரியின் ஒரு பகுதியாகவே இந்த மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் இலங்கையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன



