சமகால அரசிலும் தொடரும் நெருக்கடி - கடும் ஆதங்கத்தில் நாட்டு மக்கள்
அரசாங்கம் மின்சார கட்டணத்தை 20 முதல் 30 சதவீதம் வரை குறைத்திருந்தாலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காததால், தாம் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மின்சாரக் கட்டணங்கள் கணிசமாக குறைக்கப்பட்ட போதிலும், பல நுகர்வோர் பொருட்களின் விலைகள் இன்னும் அப்படியே இருப்பதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு ஈடாக, நுகர்வோர் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாழ்க்கைச் செலவு
நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமையினால் வாழ்க்கைச் செலவு இன்னும் கடுமையாகிவிட்டதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் வீட்டு நுகர்வோருக்கான மின் கட்டணம் 20 சதவீதமும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் 30 சதவீதமும் குறைக்கப்பட்டது.
பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





விசாரணைக்கு கைக்கோர்த்து வந்த மாதம் ரங்கராஜ்.. பிரசவத்தை நெருங்கும் ஜாய் கிரிசில்டா- நேரில் சந்திப்பு! Manithan

ரிலீஸ் முன்பே பிரதீப் ரங்கநாதன் Dude திரைப்படம் செய்துள்ள கலெக்ஷன்... தயாரிப்பு நிறுவனம் ஹேப்பி Cineulagam
