நுகர்வோருக்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பை நுகர்வோர் அறிந்து கொள்வதற்காக வெளியிடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வாடிக்கையாளர் மற்றும் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அசேல பண்டார கொழும்பில் இன்று (04.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
வெங்காய விலை
மேலும் தெரிவிக்கையில், வெங்காயத்திற்கு மதிப்பிடப்பட்ட விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு வெங்காயம் 384 ரூபா தொடக்கம் 422 ரூபா வரை விற்பனை செய்யப்பட வேண்டும்.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 278 முதல் 306 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் இளஞ்சிவப்பு வெங்காயம் 305 முதல் 335 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |