அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விலை குறைப்பு விபரம்
இதன்படி ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 75 ரூபா குறைக்கப்பட்டு 350 ரூபாவிற்கும், கோதுமை மா 5 ரூபாவினால் குறைப்பட்டு 190 ரூபாவிற்கும், வெள்ளை கௌப்பி 110 ரூபாவினால் குறைப்பட்டு 990 ரூபாவிற்கும், சிவப்பு கௌப்பி 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு 950 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காய்ந்த மிளகாய் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவிற்கும், நெத்தலி 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 930 ரூபாவிற்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 185 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
