அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தமிழ் - சிங்கள புத்தாண்டு காலப்பகுதிக்குள் பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியான நிலையில் மக்களின் வருமான அளவை விட பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையினால் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முட்டை இறக்குமதி
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,பண்டிகை காலத்திற்கு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.