சீனாவிற்காக உளவு வேலை : கைதான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் கணவர் உட்பட மூவருக்கு பிணை
சீன உளவு அமைப்பிற்கு உதவியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ஸ்கொட்லாந்து லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோனி ரீடின் (Joani Reid) கணவர் உட்பட மூவரை லண்டன் மாநகரக் பொலிஸார் கைது செய்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஜோனி ரீடின் (Joani Reid) கணவர் டேவிட் டெய்லர் (39) உட்பட மேத்யூ ஆப்ளின் (43) மற்றும் ஸ்டீவ் ஜோன்ஸ் (68) ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மூவர் மீதும் 2023ஆம் ஆண்டின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு உளவுத் துறைக்கு உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லண்டன் மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள இவர்களது இல்லங்களில் கடந்த புதன்கிழமை அதிரடி சோதனைகளை நடத்திய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர், இவர்களைக் கைது செய்துள்ளனர்.
தற்போது இவர்கள் மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கணவரின் வணிக நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்களில் ஸ்டீவ் ஜோன்ஸ் வேல்ஸ் அரசாங்கத்தின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் என்பதும், மேத்யூ ஆப்ளின் முன்னாள் லேபர் கட்சி பத்திரிகை அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது கணவரின் கைது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோனி ரீட், தனது கணவரின் வணிக நடவடிக்கைகளில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவர் சட்டத்தை மீறியதாகத் தாம் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், இந்த விவகாரம் தொடர்பாக லேபர் கட்சியின் சட்ட மற்றும் நிர்வாகப் பிரிவு ஜோனி ரீட் மீது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவர் தனது நாடாளுமன்றக் குழுப் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விலக வேண்டுமா என்பது குறித்து கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
உளவு விவகாரம்
பிரித்தானிய நாடாளுமன்ற சபாநாயகர் சர் லிண்ட்சே ஹொய்ல், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், சீன உளவு வேலைகளின் அபாயம் குறையவில்லை என்றும், ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமரின் அண்மைய சீனப் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளைச் சீர்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இந்த உளவு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் ஜனநாயகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுத் தலையீடுகள் இவை" என பாதுகாப்புத் துறை அமைச்சர் டான் ஜார்விஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரானிய புலானாய்வு பிரிவுகளை வேரறுக்கும் இஸ்ரேல் - ஏவப்பட்ட 5000 குண்டுகள் - IDF இன் மிரள வைக்கும் தகவல்
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam