ரணிலின் இல்லத்தை எரித்த சம்பவத்துடன் பிரதி அமைச்சருக்கு தொடர்பு என குற்றச்சாட்டு
கடந்த 2022 ஆண்டு ஜூலை 9ம் திகதியன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு, கொல்லுப்பிட்டியில் அமைந்துள்ள தனிப்பட்ட இல்லம் தீ மூட்டப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவராக பிரதி அமைச்சர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் மற்றும் தீவைத்த சம்பவத்துடன் பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
எனினும், எரங்க குணசேகர நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவால் முன்னிலையாக முடியவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதேபோல், ஏனைய சில சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்திருந்தனர்.
நீதிமன்றம் 4 சந்தேகநபர்களுக்கு பிடி விராந்து உத்தரவு பிறப்பித்துளு;ளது. அடுத்த விசாரணைக்கு எரங்க குணசேகர நீதிமன்றத்தில் கட்டாயம் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது ரணிலின் வீடு எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri