காசநோயை முற்றாக ஒழிப்போம் : திருகோணமலை வைத்திய அதிகாரி
காசநோய் தினமாக எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் நிமித்தம் சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம் என திருகோணமலை பொது வைத்தியசாலை சுவாச நோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்திய பொறுப்பு அதிகாரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் காசநோயின் தாக்கம் மிக அதிகளவில் காணப்படுகின்ற நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
‘காசநோய் முற்றுமுழுதாக குணப்படுத்தக் கூடிய ஒரு நோயாக உள்ளபோதும் மருத்துவத்துறை மற்றும் பொது மக்களின் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஊடாக அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
இந்த நோயானது உடலின் எல்லா பாகங்களிலும் ஏற்படக்கூடடிய ஒன்றாகும்.நுரையீரல் பகுதியில் 80 வீத பாதிப்பையும் நுரையீரல் தவிர்ந்த பகுதிகளில் 20 வீத பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியது.
ஒவ்வொரு நோய்க்கும் நோயரும்பு காலம் ஒன்று உண்டு. காசநோயைப் பொறுத்தவரையில் எட்டு கிழமைகளிலிருந்து மனிதனின் நிர்ப்பீடண சக்தியைப் பொறுத்து இதன் காலம் வேறுபடலாம்.
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் சுவாச நோய் சிகிச்சை பிரிவில் அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த வசதிகளை மருத்துவ துறையில் உள்ளவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் கூடுதலான நன்மைகளைப் பெற முடியும்‘ என்றும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |