தேடுதல் மற்றும் மீட்புக்குழுவிற்கான உபகரணங்கள் மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கி வைப்பு
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனால் மாவட்ட தேடுதல் மற்றும் மீட்புக்குழுவிற்கான அத்தியாவசியமான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையுடன் படகுக்கான இயந்திரம் மற்றும் பாதுகாப்பு அங்கிகள் என்பன 557வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜெயவர்த்தனவிடம் அரசாங்க அதிபர் இன்றையதினம் கையளித்தார்.
ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துவருகின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்படுகின்ற பிரதேசங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களிற்குக் கொண்டு செல்கின்ற பணியானது பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற்படையினரின் உதவியுடனேயே மேற்கொள்ளப்படுகின்றது.
இதனை அடிப்படையாகக் கொண்டு மாவட்டத்தில் 57வது படைப்பிரிவின் கீழ் தேடுதல் பாதுகாப்புக் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினை பலப்படுத்தும் நோக்குடன் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமைகளின் போது செயற்படத் தயாராகியுள்ள இக்குழுவானது நான்கு படகுகள் மற்றும் அதனோடு இணைந்த உபகரணத்தொகுதியுடன் 20 ற்கும் மேற்பட்ட படையினரைக் கொண்டதாக மீட்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுச் செயற்படத் தயார் நிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , 571படைப்பிரிவின் தளபதி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்
உதவிப்பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 15 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
